ஆம். மாற்று அரசியல் பேசும் அரசியல்வாதி.
மாற்று அரசியல் என்றவுடன் புதிதாக ஒரு கட்சி தொடங்கி, எதிர்வரும் தேர்தல்களை சந்தித்து,மக்கள் மன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்று வேலை செய்வதுதானே மாற்று அரசியல்.இல்லை. அதுவும் ஒரு வகையான அரசியல். அது தேர்தல் அரசியல்.
தேர்தலில் வாக்களிப்பது என்பது ஜனநாயகக் கடமை. அதை செய்வோம். ஆனால் தேர்தல் அரசியலை கடந்து இங்கு பல அரசியல்கள் தேவைப்படுகிறது. வருத்தத்திற்குரிய விஷயமாக இங்கு தேர்தல் அரசியலுக்கு கிடைக்கும் கவனமும் முக்கியத்துவமும் சமூக,பொருளாதார, சுற்றுச்சூழல் சார்ந்த அரசியல்களுக்குக் கிடைப்பதில்லை.
நமது சமத்துவவாதிகள் (Egalitarians) குழு சமூக அரசியல் (Social Movement) செய்ய முன்வந்து முன்னேற்ற பாதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு நாளும் புதிய சவால்களையும் அதற்கான தீர்வுகளையும் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
நம்பிக்கையுடன் இந்த சமூக அரசியலை செய்யும் அரசியல்வாதியாக பெருமைகொள்கிறேன்.
‘ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம்’ என்றான் பாரதி.
நான் சொல்கிறேன், அரசியல் செய்வோம்; அறச்செயல் செய்வோம்; நல்ல சமூகம் செய்வோம்.