குழுவின் விதிமுறைகள்

  • இவ்வமைப்பானது ஒரு தலைமையற்ற, ஜனநாயக, தன்னார்வ மற்றும் இலாப-நோக்கமில்லாத, சமத்துவ சமதர்ம விழுமியங்களைப் பின்பற்றும் குழுமம். ஆதலால், இவ்வமைப்பின் ஒவ்வொரு உறுப்பினரும், அவர்களின் வயது, சமுதாய அந்தஸ்து மற்றும் அமைப்புடன் இணைந்திருக்கும் கால அளவு இவைகளுக்கு அப்பாற்பட்டு,  சமமான உரிமை, பொறுப்பு, அதிகாரம் மற்றும் சலுகைகளுக்கு உரித்தானவரே. 
  • அமைப்பின் அனைத்து முக்கிய முடிவுகளும் வாக்கெடுப்பின் (குரல் வாக்கெடுப்பு அல்லது இணையவழி வாக்கெடுப்பு) மூலமாகவே முடிவு செய்யப்படும். அனைத்து முடிவுகளும் பெரும்பான்மையின் அடிப்படையில் அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்படும். அமைப்பின் எந்தவொரு உறுப்பினரும் உள்துறை செயற்குழுவின் உதவியுடன் வாக்கெடுப்பை முன்னெடுக்கலாம்.
  • அமைப்பின் ஒவ்வொரு உறுப்பினரும் சமத்துவவாதியே. அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் அவர்களின் பால்-அடையாளம், வயது இவைகளுக்கு அப்பாற்பட்டு, திரு, திருமதி மற்றும் மதிப்பிற்குறிய போன்ற முன்னொட்டுகளுக்குப் பதிலாக, Egalitarian (EG) என்ற பொதுவான முன்னொட்டுடன் அழைக்கப்படுவர். 
  • அமைப்பின் கொள்கை மற்றும் குறிக்கோள்கள் சார்ந்த எந்தவொரு திருத்தங்களும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் அடிப்படையில் மட்டுமே முடிவு செய்யப்படும்.
  • எந்தவொரு அரசியல் கட்சியையும், அரசியல் கட்சி சார்ந்த நிறுவனத்தையும் அமைப்பு ஆதரிக்காது.
  • அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்க மாதம் ஒரு முறை (இணைய வழி அல்லது பிற வழிகளின் வாயிலாக) கூட்டம் நடைபெறும்.
  • இந்திய அரசியலமைப்பின் நீதிநெறிகள் சார்ந்த குறைதீர்க்கும் வழிகள் அனைத்தையும் உபயோகிக்கும் வரை, இவ்வமைப்பு தன்னை எந்த விதமான போராட்ட வழிமுறைகளிலும் இணைத்துக் கொள்ளாது. இருந்தபோதிலும், அமைப்பின் எந்தவொரு உறுப்பினரும் எந்தவொரு போராட்டத்திலும் சுய-விருப்பத்தின் பெயரில் பங்குபெறுவதை அமைப்பு தடை செய்யாது.
  • அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் நிதி குறித்த விடயங்கள் (நன்கொடை, வரவு, செலவு மற்றும் நிதி இருப்பு) அதன் மாதாந்திர-இதழ் மற்றும் இணையத்தின் வழியே வெகுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும்.
  • அமைப்பின் செயல்பாடுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திக் கட்டுரைகளுடன் மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் அதன் மாதாந்திர இதழில் பிரசுரமாகும்.
  • அமைப்பின் எந்தவொரு உறுப்பினரும் சாதியப் பாகுபாட்டுடன் நடந்து கொள்வாராயின் இவ்வமைப்பில் நீடித்திருக்க தகுதியற்றவராவார்.