“Castes in India –Their Mechanism, Genesis and Development” is a paper presented by Dr. B. R. Ambedkar at an Anthropology seminar at Columbia University on 9th May 1916. After forewarning the consequences of the caste system as ‘It is a local problem, but one capable of much wider mischief, for as long as caste in India doesContinue reading “Castes in India: Book Summary”
Category Archives: Special Articles
நிலம், அதிகாரம், பஞ்சமி நிலம்
நிலம், நிலவுடைமை என்பதை பொருளாதார மூலதனம் என்ற அளவில் மட்டுமே பார்ப்பது தவறான புரிதலையே தரும். வரலாறு வேறுமாதிரியான ஒரு சித்திரத்தை நிலத்திற்கு அளிக்கிறது. வரலாறு நெடுக நிலம் என்பது அதிகாரம், சாதிய வன்மம், ஆணாதிக்கம் ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது. வரலாறு அறியாதவர்களால் இந்தச் சித்திரத்தைப் புரிந்துகொள்ள முடியாது. நிலத்தை உடைமையாக் கொண்டவன்தான் இங்கு அதிகாரத்தைக் கைப்பற்றுகிறான். அதிகாரம் மூலம் எளிய மக்களின் மீது தனது அடக்குமுறையை ஏவுகிறான். 21ம் நூற்றாண்டிலும் கூட ஒரு பெண் தனக்கான பூர்வீகContinue reading “நிலம், அதிகாரம், பஞ்சமி நிலம்”
காட்டுப்பேச்சி பாடுறேன்!
அன்று இரவு முழு பௌர்ணமி. நாம் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து விட்டோம் என்பதற்காகவும், நம்மிடம் பணம், அரசியல் செல்வாக்கு இல்லை என்பதற்காகவும் பாவம் இப்படி அநியாயமாக சாதியப் பாகுபாட்டால், ஏற்றத்தாழ்வுகளால் உன்னைக் கொன்று விட்டார்களே என்று நிலவின் ஒளி கண்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கையில் வானத்தை நோக்கி காட்டுப்பேச்சியிடம் பேசிக் கொண்டிருந்தான் முகில். வழக்கம் போல காட்டுப்பேச்சியும் தன் அண்ணனை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தாள். காட்டுப்பேச்சி: அண்ணா, இவ்வுலகில் நிரந்தரம் என்று எதுவும் கிடையாது. நான், நீ, இந்தContinue reading “காட்டுப்பேச்சி பாடுறேன்!”
மறக்கத் தவிக்கும் நினைவுகள்
அன்று மதியம் என் நண்பனின் [குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)] அண்ணன் [லட்சுமணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)] அவர்களுடைய வீட்டிலிருந்து என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான். இந்த அவலத்தை செய்துவிட்டதோடு மட்டுமில்லாமல், குமாரைப் பார்த்து ஏன்டா நாயே, இந்த பரதேசி எல்லாம் வீட்டுக்குள்ள கூட்டிட்டு வருவியா என்று மிக கோபத்தோடு கத்தினான். லட்சுமணன் ஏவிய அந்த வாா்த்தை அம்பு என்னை சுக்குநூறாக்கியது. ஏன்டா வீட்டுக்குள்ள வந்த என்று குமார் அம்பின் நானை இழுத்து விட்டான். மேலும் நொறுங்கியது என்Continue reading “மறக்கத் தவிக்கும் நினைவுகள்”
எங்கள் கிராமத்தில் சாதி எப்படி இருக்கும் தெரியுமா?
இன்னும் எனது கிராமத்தில் சாதி பெருகிக் கொண்டுதான் உள்ளது. தோட்டத்திற்கு ஆட்கள் தேவை என்றால், கீழ்சாதி எனக் குறிப்பிடுவர்களைத்தான் கூப்பிடுவார்கள். அதிலும் உயர்சாதி என குறிப்பிடுவர்களுக்கு என்றால் பால் டீ, கீழ் சாதியென குறிப்பிடுவர்களுக்கு வரக்காப்பி என்று சொல்லப்படும் பால் இல்லாத டீ தான் கொடுப்பார்கள் அதுவும் கொட்டான் குச்சியில் தான் தரப்படும். அனைத்து ஊர் போலவே, எங்கள் ஊரும் இரண்டு ஊராக பிரிந்து இருக்கும். ஒன்று காடுகளை வைத்து இருக்கும் மேல்சாதி எனக் குறிப்பிடப்படுபவர்கள் மற்றொன்று Continue reading “எங்கள் கிராமத்தில் சாதி எப்படி இருக்கும் தெரியுமா?”
வெள்ளை அங்கி
1. அட இது என்ன இப்படி ஓர் தூய்மையான அமைதியான இடம் இந்த பரபரப்பான நகரில் இருக்கிறதா? ஒழுங்குபடுத்தபட்ட அட்டவணையிடப்பட்ட ஒரு நிருவாகத்தின் கீழ் இயங்கும் எந்த ஒரு இடமும் ஆலயம் போல் தூய்மையாக தான் தோன்றும். அப்படி இருக்க, ஓர் ஆலய நிர்வாகிகளை உருவாக்கும் இடம் இப்படி தானே இருந்தாக வேண்டும். ஆம், அது ஒரு இறையியல் கல்லூரி. பாதிரியார் சேவை பணிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களை இங்கே பார்க்க முடியும். அனைவரும் தன்னார்வத்தோடு வந்திருக்கContinue reading “வெள்ளை அங்கி”
Merit as a Proxy for Ascription
Every established order tends to produce the naturalization of its own arbitrariness. Pierre Bourdieu, “Outline of a Theory of Practice” [For upper castes,] caste-qua-caste has already yielded all that it can and represents a ladder that can now be safely kicked away. Having encashed its traditional caste-capital and converted it into modern forms of capitalContinue reading “Merit as a Proxy for Ascription”
இன்று நான் EGALITARIANS உடன்…
சாதி என்பதன் அர்த்தம் அறியும் முன்னமே அதன் ஆதிக்கத்தை அறியப்பெற்றேன் என் பள்ளி பத்தாம் பருவதிலேயே. நான் பிறந்த கிராமம் ஓர் அழகிய மலை கிராமம். இதமான குளிரும் மிதமான வெயிலும், அடர்ந்த வனங்களும், அழகிய மனங்களும் கொண்ட அமைதியான ஊர். அன்றைய காலத்தில் எங்கள் கிராமத்தில் விவசாய நிலங்களின் மதிப்பு எங்கள் மலைக்கு கீழ் உள்ள நகரங்களை விட மிகக் குறைவு.
சிறைச்சோலை – சிறுகதை
அது ஒரு அழகான சோலை. மரங்களும், செடிகளும், கொடிகளும் ஒன்றோடொன்று கூடி, சிரித்து, விளையாடிக்கொண்டிருந்தது. மண்ணின் ஈரப்பதம் முந்தைய நாள் பெய்திருந்த மழையைக் காட்டிக்கொடுத்தது. மரங்களின் இலைகளில் தங்கியிருந்த மழைத்துளிகள் எப்போது வேண்டுமானாலும் மண்ணில் விழுந்து விடக்கூடும். காண்போர் கண்களைக் கட்டிப்போடும் அளவிற்கு, வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தன.வெப்பச் சலனக் காற்றுகூட அச்சோலையைக் கடந்து செல்கையில் குளிர்ந்த தென்றலாக மாறிடக்கூடும்.
அரசியல்வாதி பேசுகிறேன்
ஆம். மாற்று அரசியல் பேசும் அரசியல்வாதி.மாற்று அரசியல் என்றவுடன் புதிதாக ஒரு கட்சி தொடங்கி, எதிர்வரும் தேர்தல்களை சந்தித்து,மக்கள் மன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்று வேலை செய்வதுதானே மாற்று அரசியல்.இல்லை. அதுவும் ஒரு வகையான அரசியல். அது தேர்தல் அரசியல்.